நிறுவனம்:யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
From நூலகம்
Name | யாழ்/ பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை |
Category | பாடசாலைகள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | பலாலி |
Address | பலாலி, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
பலாலி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையனது யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு பிரதேசத்திலமைந்த பலாலி எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1947ஆம் ஆண்டு பலாலி அரசினர் ஆசிரியர் பயிற்சி கழகத்திற்கு வழங்கப்பட்ட கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியில் இப் பாடசாலை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 51 மாணவர்களையும் வசாவிளான் மத்திய மகா வித்தியாலய ஆசிரியர் கனகசபாபதி அவர்களை தற்காலிக அதிபராகவும் கொண்டு இப் பாடசாலை இயங்கியது.
1961ஆம் ஆண்டு காலப்பகுதியில் 6ஆம் வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் 1972ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த கல்வித் திட்டத்தின் கொள்கைக்கு ஏற்ப இவ் வித்தியாலயம் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஆரம்ப பாடசாலையானது.
Resources
- நூலக எண்: 13940 பக்கங்கள் 113-114