நிறுவனம்:யாழ்/ பருத்தித்துறை புலோலி சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ பருத்தித்துறை புலோலி சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புலோலி, பருத்தித்துறை
முகவரி புலோலி, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

புலோலி சிவன் கோயில் (புலோலி பர்வதவர்த்தனி சமேத பசுபதீஸ்வரர் கோயில்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை, புலோலியில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் அமைந்துள்ள இடம் பண்டைய காலத்தில் "வென்றிவாகு தேவன் குடியிருப்பு" என்பதாகும். 1782ம் ஆண்டு கட்டப்பட தொடங்கிய இவ் ஆலயம் 1922ம் ஆண்டிலேயே நிறைவுற்றது.

மூல மூர்த்திகளாக பர்வதவர்த்தனி அம்பாளும் பசுபதீஸ்வரரும் வீற்றிருக்கின்றனர். இவ் ஆலய நிர்வாகம் புலோலி வாழ் செட்டி பரம்பரையினாலேயே நடாத்தப்பட்டு வருகிறது. இன்று வரை இவ் ஆலயத்தில் தனிநபர் நிர்வாகமே மேற்கொள்ளப்படுகிறது. இவ் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா 1944, 1966, 1987, 2005 ஆகிய வருடங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 126-129

வெளி இணைப்பு