நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place தெல்லிப்பளை
Address தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
Telephone 0213211361
Email
Website

தெல்லிப்பளை நடேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. பாலர் வகுப்பிலிருந்து உயர்தரம் வரை பாங்குறப் பரிணமித்து வந்த நடேஸ்வராக் கல்லூரியினின்றும் பிரித்து தனித்து உருவாக்கப்பட்டதே இப் பாடசாலையாகும்.

01.01.1979இல் அதிபர் மு.வடிவேலன் அவர்களை உள்ளடக்கிய 16 ஆசிரியர்களையும் பாலர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான 16 ஆசிரியர்களையும் 575 மாணவர்களையும் கொண்டு ஆரம்ப பாடசாலையாக இயங்கும் வண்ணம் அந்நாள் நடேஸ்வரக் கல்லூரி அதிபர் பொன்.சோமசுந்தரம் அவர்களும், காங்கேசன்துறை வட்டாரக் கல்வி அதிகாரி பொ.சிவஞானசுந்தரம் அவர்களும் இவ் வித்தியாலயத்தை ஆரம்பித்து வைத்தனர்.

13.06.1979ஆம் ஆண்டில் இப் பாடசாலைக்கான ஓர் அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டு அதன் மூலம் இப் பாடசாலைக்கான ஆசிரியர் கூடம், விளையாட்டு மைதானம், சிறுவர் நூலகம் போன்ற பல தேவைகள் நிறைவேற்றப்பட்டன.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 128-130