நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் தெல்லிப்பளை
முகவரி தெல்லிப்பளை கிழக்கு, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

யாழ்/ தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயமானது யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1900ஆம் ஆண்டு க.சுந்தரமூர்த்தி ஐயர் அவர்கள் கிறிஸ்தவ சூழலில் படித்த மாணவர்களுக்கு தமிழறிவும், சைவ உணர்ச்சியும் உண்டாகுமாறு தமது இல்லத்திற்கு அருகே ஒரு சிரு மண்டபம் அமைத்து கற்பித்துவந்தார். நாளடைவில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க ஐயர் அவர்கள் பாடசாலையாக நடத்தி வந்தார். எனவே இப் படசாலை ஐயர் படசாலை என அழக்கப்படலாயிற்று. மிஷனரிமாரின் எதிர்ப்புக்களிற்கு மத்தியிலும் இப்பாடசாலை 1901ஆம் ஆண்டு உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டதோடு 1902ஆம் ஆண்டில் வருடாந்த பரீட்சையும் ஆரம்பிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டுவரை 6ஆம் வகுப்புக்கள் வரையே நடாத்தப்பட்டது. பின்னர் உயர்தர வகுப்புக்களும் நடாத்தப்பட்டு 1943ஆம் ஆண்டு S.S.C. வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலையில் 1943இல் புதிய மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நிதி நிலை காரணமாக 1947.07.04ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. 1952ஆம் ஆண்டுகளில் நிறுவகர் நினைவாக பாலர் பகுதிக் கட்டிடமும் ஆரம்பிக்கப்பட்டது. அத்தோடு இதே ஆண்டில் ஒக்டோபர் 4ஆம் திகதி இப் பாடசாலையின் பொன் விழாவும், 1960ஆம் அண்டு மே மாதத்தில் வைர விழாவும் கொண்டாடப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 68-70