நிறுவனம்:யாழ்/ தெல்லிப்பளை கட்டுவன்புலம் மகாவித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ தெல்லிப்பளை கட்டுவன்புலம் மகாவித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place தெல்லிப்பளை
Address கட்டுவன்புலம், தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
Telephone 0213211367
Email
Website

தெல்லிப்பளை கட்டுவன்புலம் மகாவித்தியாலயம் யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பிரதேசத்திலமைந்த தெல்லிப்பளை கிராமத்தில் கட்டுவன்புலம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. பின்தங்கிய மாணவர்களின் நலனை முன்னிட்டு அப் பகுதி மக்களாலும் பொன்னம்பலம் அவர்களின் வழிகாட்டலிலும், எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் தலமையிலும் அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் முயற்சியிலும், அப்போதைய பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினர் பொன்.கந்தையாவின் உதவியினாலும் 1959ஆம் ஆண்டு 220 மாணவர்களுடனும் ஆறு ஆசிரியர்களுடனும் தற்காலிக கொட்டில் ஒன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பாடசாலை தென்னிலங்கையில், ஆசிரியராக கடமையற்றி 1958ஆம் ஆண்டு இலங்கையிலேற்பட்ட இனக்கலவரம் காரணமாக பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் திரும்பிய மற்றும் சாதி வெறியினால் யாழ் குடாநாட்டில் ஆசிரிய தொழில் செய்ய முடியாத காரணத்தினால் துன்பமுற்ற ஆசிரியர்களின் சேவையை பெறுவதென தீர்மானிக்கப்பட்டு அவர்களாலேயே கற்பித்தல் முன்னெடுக்கப்பட்டது.

1974ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரணதர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு 1978ஆம் ஆண்டு மாணவர்கள் கா.பொ.த. சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றினர். 1980ஆம் ஆண்டுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அ.அமிர்தலிங்கம் அவர்கள் இப் பாடசாலையை மகாவித்தியாலயமாக தரமுயர்த்தி கட்டடவசதிகள், நிலம் என்பவற்றை பெற்றுக் கொடுத்தார்.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 119-120