நிறுவனம்:யாழ்/ சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம்
From நூலகம்
Name | யாழ்/ சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம் |
Category | இந்து ஆலயங்கள் |
Country | இலங்கை |
District | யாழ்ப்பாணம் |
Place | சுழிபுரம் |
Address | சுழிபுரம் கிழக்கு, யாழ்ப்பாணம் |
Telephone | |
Website |
சுழிபுரம் பறாளை விநாயகர் ஆலயம் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் மேற்கு பகுதியில் அமைந்த சுழிபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.
இவ் ஆலயம் தமிழரசர் காலத்தில் கட்டப்பட்ட விநாயகர் ஆலயமாகும். போர்த்துக்கேயர் மற்றைய சைவஆலயங்களை இடிக்கின்ற காலத்தில் இதனையும் இடிக்கத்தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக்கொத்தி இடிக்க விடவில்லை. அதனால் அப்பிள்ளையாருக்கு கண்ணைக்கொத்தி காக்கைப் பிள்ளையார் என்ற பெயரும் வழங்கப்பட்டதாக ஆலய வரலாறு அமைந்துள்ளது.
இவ் ஆலயத்தின் மீது நல்லூர் சின்னத்தம்பிப்புலவர் பறாளை விநாயகர் பள்ளு என்ற சிற்றிலக்கியத்தை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.