நிறுவனம்:யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place கீரிமலை
Address கீரிமலை, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்
Telephone 021-320 7660
Email iyalvaanan@gmail.com
Website www.naguleswara.sch.lk

கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் கீரிமலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. கீரிமலைச் சூழலில் சைவப் பாடசாலை இல்லாத குறையைப் போக்க வ.கந்தையா அவர்களும், சு.கனகசபை அவர்களும் சைவ வித்தியாவிபிருத்திச் சங்க ஆலோசனையுடன் இப் பாடசாலையை அமைத்தனர். 1955ஆம் ஆண்டு யூலை 29ஆம் திகதி முதல் வ.கந்தையா அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக கடமையாற்றினார்.

இவர்களது முழுமையான உழைப்புக் காரணமாக 1955ஆம் ஆண்டு யூலை மாதம் முதலாம் திகதி கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம் என்ற பெயரில் இப் பாடசாலை பதிவு பெற்றது. க.பொ.த.சாதாரணதர வகுப்பும் இவ் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் சைவ வித்தியாவிபிருத்திச் சங்க முகாமையில் இயங்கிய இவ் வித்தியாலயம் 31.12.1962ஆம் ஆண்டு அரசியலரின் நேரடி பரிபாலணத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இப் பாடசாலை 01.07.1965இல் பத்தாவது ஆண்டு நிறைவு விழாக் கண்டதோடு 29-06-1969இல் கதம்ப விழாவையும் கொண்டாடியது. 1990இல் இடம்பெற்ற போர்ச்சூழலைத் தொடர்ந்து பாடசாலை அசையும் சொத்துக்களுடன் இடம்பெயரத் தொடங்கி பல இடங்களில் இயங்கியது. பின்னர் 02-01-2012 அன்று கீரிமலையில் இப் பாடசாலை இயங்க ஆரம்பித்தது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 115-116

வெளி இணைப்புக்கள்