நிறுவனம்:யாழ்/ ஊர்காவற்துறை கணபதீஸ்வரம் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ ஊர்காவற்துறை கணபதீஸ்வரம் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் ஊர்காவற்துறை
முகவரி ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

ஊர்காவற்துறை கணபதீஸ்வரம் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை, கரம்பன் நுழை வாயிலில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக அம்பாள் எழுந்தருளியுள்ளார். இம் மூலமூர்த்தியானது காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் என்று அழைக்கப்படுகின்றனர்.

அனலைதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட கணபதீஸ்வர ஐயா, காசி யாத்திரை சென்று கங்கையில் மூழ்கி எழுந்த போது சிவலிங்கம் ஒன்று அவருக்கு கிடைத்தது. போதிய நிதி வளம் கொண்ட இவர் ஊர்காவற்துறையிலே காணியைக் கொள்வனவு செய்து இந்தியாவில் இருந்து ஸ்தபதிமாரை அழைத்து ஆகம விதிப்படி 1910ம் ஆண்டில் இவ் ஆலயத்தை அமைத்தார்.

அதே ஆண்டிலேயே இந்தியாவில் இருந்து வந்த சிவாச்சாரியார்களால் முதாலாவது அனாவர்த்தன கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. இதன் 2வது கும்பாபிஷேகம் 1927ம் ஆண்டிலும், 3வது கும்பாபிஷேகம் 1996ம் ஆண்டிலும் நடைபெற்றன.

இவ் ஆலயத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள தலவிருட்சமான அரசமரத்தின் காலம் அறிய முடியாததாக உள்ளது. ஆனி உத்தரத்தை தீர்த்தமாக கொண்டு 15 நாட்கள் கொடியேற்றத்துடன் மகோற்சவம் இடம்பெறுகின்றன. இவ் ஆலயத்தில் ஐந்து காலப் பூசைகள் இடம்பெறுகின்றன.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 173-176