நிறுவனம்:யாழ்/ இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரி

From நூலகம்
Name யாழ்/ இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரி
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place இளவலை
Address இளவலை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

இளவாலை புனித ஹென்றி அரசர் கல்லூரியானது யாழ்ப்பாணத்தில் இளவலையில் அமைந்துள்ளது. இப் பாடசாலையை அக்காலத்தில் மிகச் சிறப்புடன் இயங்கி வந்த புனிதவளனார் சபையினர் பொறுப்பேற்று நடத்தினர். 1926ஆம் ஆண்டு கல்வி அமைச்சினால் தரம் உயர்த்தப்பட்ட இப் பாடசாலை உயர்தர ஆங்கிலக் கல்லூரியாக இயங்கத் தொடங்கியது.

இப் பாடசாலை அதிபர் ஜீவரத்தினம் காலத்தில் 1951இல் இப் பாடசாலை முதலாம் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. இப் பாடசாலை மாணவர்கள் பல போட்டிகளிலும் பங்குபற்றி பரட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றனர். அவற்றுள் உதைப்பந்தாட்ட போட்டிகளில் சிங்கப்பூர் கேடயம், சேர் ராபற் கேடயம், A N C L கேடயம், விளையாட்டுத் திணைக்கள கேடயம் என்பவற்றை இப் பாடசாலை மணவர்கள் வென்றமை சாதனையாகும்.

17 வருடங்கள் தனியர் ஸ்தாபனமாக இயங்கி 1977இல் அரசாங்க கல்லூரியாகி இரசநாயகம் அடிகளாரின் உழைப்பின் சிகரமாய் புதிய மாடிக்கட்டிடமும், மைதானத்தை சுற்றிய மதிலும் உருவாகின. கல்வியிலும் விளையாட்டிலும் இக் கல்லூரியின் சாதனை தொடர்கின்றது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 79-81