நிறுவனம்:யாழ்/ அரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ அரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் {{{ஊர்}}}
முகவரி -
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

அரியாலை ஶ்ரீ சரஸ்வதி அம்பாள் கோயில். இற்றைக்கு 90ஆண்டுகளுக்கு முன் ஈழத்திருநாட்டின் யாழ்பாடி பரிசுப்பெற்ற அரியாலையின் மேற்குபகுதியில் சரித்திர பிரசித்தி பெற்ற பாணன் குளம் அமைந்துள்ள இடத்திலிருந்து மிக அண்மையில் சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்கப்பெற்று பேணிபாதுகாக்கப்பட்டு அருளாலயமாக போற்றப்பட்டு வருகிறது. இவ்வாலயத்தின் சிறப்பினை நோக்கும் போது ஈழ மணித்திருநாட்டில் கலைமகளுக்கு என்று ஓர் ஆலயம் அரியாலைப்பிரதேசத்திலே அமைந்துள்ளமை வரப்பிரசாதமாகும். 1929ம் ஆண்டில் அரியாலையைப் பிறப்பிடமாக கொண்ட நுண்கலைத்தொழில் வல்லுனராகத் திகழந்த திரு. கதிர்காமு வேலுப்பிள்ளை என்பவரால் இந்தக் கோயில் கார்த்திகை மக நட்சத்திரத்தில் ஸ்தாபிக்கப்பட்டது இதற்கான வரலாறு பின்வருமாறு அமைத்து புதுமனை புகுவிழாவிற்காக படங்கள் வாங்கி வீட்டிற்கு வந்து படங்களை பார்த்த போது இலட்சுமி படத்திற்கு பதிலாக சரஸ்வதி படத்தை மீளமறுநாள் கடையில் கொடுத்து மாற்றுவதென நினைத்திருந்தார். ஆனால் அன்றிரவு அவரின் கனவில் ஒரு பெண்மணி தோன்றி தன்னை வைத்து வழிபடுமாறு அவருக்கு அருள்வாக்கு கொடுத்தார். அப்படத்தை 1929ம் ஆண்டு ஒரு சிறு குடிசையில் வைத்து வழிபட்டு வந்தார்.