நிறுவனம்:யாழ்/ அச்சுவேலி காட்டு மலைக் கந்தசுவாமி கோயில்
From நூலகம்
| Name | யாழ்/ அச்சுவேலி காட்டுமலைக் கந்தசுவாமி கோயில் |
| Category | இந்து ஆலயங்கள் |
| Country | இலங்கை |
| District | யாழ்ப்பாணம் |
| Place | அச்சுவேலி |
| Address | அச்சுவேலி, யாழ்ப்பாணம் |
| Telephone | |
| Website |
காட்டுமலைக் கந்தசுவாமி கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அச்சுவேலி, நாவலம்பதி எனும் இடத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருக்கவும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் விநாயகரும் அம்மையும் வைரவரும் காளியும் பழனியாண்டவரும் பரிவார மூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டுள்ளது. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் ஆனித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் இவ் ஆலயம் அருளாளர் சீனியர் அவர்களால் நிறுவப்பட்டது.