நிறுவனம்:பீலியடி சனசமூக நிலையம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீலியடி சனசமூக நிலையம்
வகை சமூக நிறுவனம்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பீலியடி
முகவரி பீலியடி,திருக்கோணமலை
தொலைபேசி 0778058741
மின்னஞ்சல்
வலைத்தளம்


இது ஒரு சமூக நிறுவனம் ஆகும். திருக்கோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு கிராம மட்ட அமைப்பு ஆகும். திருக்கோணமலையின் நீண்ட கால வரலாற்றைக் கொண்ட பிரதேசம் ஆகிய கன்னியாவில் அமைந்துள்ள முக்கியமான ஒரு சமூக நிறுவனம். இது 2014 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு, ஆரம்பிக்கப்பட்டிருக்கு போதிலும் கூட நீண்ட காலமாக இயங்கி வந்த ஒரு மக்கள் குழுவாகும். பீலியடி கிராமம் ஒரு புறத்தில் கன்னியா வெண்ணீர் ஊற்றையும், மறுபுறங்களில் வயல்வெளிகளையும் கொண்ட ஒரு கிராமம்.

செந்தாமரையில் அன்னத்தைக் கொண்ட சின்னத்தை அடையாளமாகக் கொண்டு நிறுவனம், குறித்த பகுதியில் உள்ள மக்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் நலன் தொடர்பில் மிகவும் அக்கறையுடன் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் தற்சமயம் 13 உறுப்பினர்களைக் கொண்ட நிர்வாக சபை காணப்படுவதுடன், 160க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். பீலியடி சனசமூக நிலையம் ஊடாக வருடாந்தம் தமிழர் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான பல நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. குறிப்பாக உடுக்கை திருவிழா எனும் நிகழ்வு உடுக்கை கலையை மேலும் ஊக்குவிக்கும் நோக்குடன் பீலியடி சனசமூக நிலையத்தால் நடத்தப்பட்டுள்ளது. இந்த சனசமூக நிலையத்தின் சின்னத்தில் "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்" என்ற திருக்குறளை வாசமாக கொண்டுள்ளது.

மேலும் குறித்த பகுதியில் இடம்பெற்று வந்த கிரவல் மண் அகழ்வு காரணமாக கிராம மக்கள் பாதிக்கப்பட்ட பொழுது, பீலியடி சனசமூக நிலையத்தினர் முன்னின்று குறித்த மக்களை கிரவல் அகழ்விலிருந்து பாரிய சிரமங்களுக்கு மத்தியில் முற்றாக பாதுகாத்துள்ளனர். தற்சமயம் குறித்த பகுதியில் கிரவல் மண் அகழ்வு பூரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. பீலியடி சனசமூக நிலையத்துக்கு சொந்தமான கட்டிடம் காணப்படுவதுடன், அங்கு நூலகம் ஒன்றை அமைப்பதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.