நிறுவனம்:திரு/ திருக்கோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி

From நூலகம்
Name திருக்கோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி
Category பாடசாலை
Country இலங்கை
District திருகோணமலை
Place திருக்கோணமலை நகரம்
Address தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி, திருக்கோணமலை
Telephone 0262222761
Email
Website

திருக்கோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி திருக்கோணமலையில் காணப்படும் பாடசாலைகளில் மிக குறைந்த வயதை கொண்ட, அதே சமயம் தேசிய ரீதியிலும், மாகாண ரீதியிலும் பல சாதனைகளை படைத்த ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது. இது 1978 ஆம் ஆண்டு மாசி மாதம் பத்தாம் திகதி அப்போதைய தேசிய பேரவை உறுப்பினர் கௌரவ இரா. சம்பந்தன் அவர்களால் உவர்மலை எனும் திருக்கோணமலையின் முக்கிய கிராம பகுதியாக காணப்பட்ட பகுதியில், அந்த பகுதியைச் சேர்ந்த மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன், குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை ஆகும். இந்த பாடசாலை கல்வி, ஒழுக்கம், தூய்மை என்பவற்றை மகுட வாசகமாக கொண்டு இயங்கி வருகின்றது.

பாடசாலை ஆரம்பிக்கப்படும் பொழுது "உவர்மலை தமிழ் வித்தியாலயம்" என அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த பாடசாலையில் 150 மாணவர்களும், நான்கு ஆசிரியர்களுடனும் இயங்கி வந்த நிலைமையில், இந்தப் பாடசாலையில் முதலாவதாக 60க்கு 20 அடி மண்டபம் ஒன்று பாடசாலையின் அதிபராக காணப்பட்ட வேலுப்பிள்ளை ஐயாவின் பங்குடன் அமைக்கப்பட்டது.

பின்னர் கல்வி அமைச்சின் சுற்று நிறுபன படி, பாடசாலை அபிவிருத்தி சங்கம் 16.6.1979 ஆம் திகதி அங்குராற்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாடசாலையில் முதலாவது மெய்வல்லுனர் போட்டி 1981 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இடம்பெற்றது.

சுமார் 45 வருடங்களுக்குள் திருக்கோணமலையில் தலை சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக இந்த பாடசாலை உயர்ந்துள்ளது. திருக்கோணமலை நகரில் உயர்தர பிரிவில் கலை, வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், உயிரியல் தொழில்நுட்பம், பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஏழு துறைகளையும் கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது. இந்தப் பாடசாலையில் 2000க்கு பிந்திய ஆண்டுகளில் கலை, வர்த்தகம், கணிதம், உயிரியல் என நான்கு துறைகளிலும் தேசிய ரீதியில் உயர்தரத்தில் முதல் மூன்று இடங்களுக்குள் மாணவர்கள் இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் சாரணீயம், விளையாட்டுக்கள் என இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் குறித்த பாடசாலை பல சாதனைகளை புரிந்து வந்துள்ளது. இந்தப் பாடசாலையின் முதலாவது அதிபராக திரு. வ. தங்கவேல் அவர்களும், தொடர்ந்து 1984ம் ஆண்டில் திரு. கு. பாலச்சந்திர ஐயரும், அவரைத் தொடர்ந்து 1990யில் திரு. எம். மகாதேவன் அவர்களும், பின்னர் 1992யில் திரு. சி. நவரத்தினம் அவர்களும், 2008யில் திரு. நா விஜேந்திரன் அவர்களும், 2009யில் திரு. ஆ. செல்வநாயகம் அவர்களும், பின்னர் திரு. எஸ். மதியழகன் அவர்களும். அதன் பின்னர் திரு. எஸ். ஆனந்தசிவம் அவர்களும் பணியாற்றி அவரின் பின்னர் திரு. வி. தவராஜா அவர்களும் பின்னர் தற்போதைய அதிபர் திரு. கே.ரவிதாஸ் அவர்கள் கடமை ஆற்றிக் கொண்டுள்ளார்.

இந்தப் பாடசாலை தற்போது தேசிய பாடசாலையில் ஒன்றாக காணப்படுவதுடன், கிழக்கு மாகாணத்திலேயே மிகப்பெரிய கலையரங்கத்தை கொண்ட பாடசாலையாகவும் காணப்படுகின்றது.