நிறுவனம்:குஞ்சன் குளம் கிராம அபிவிருத்திச் சங்கம்
நூலகம் இல் இருந்து
பெயர் | குஞ்சன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் |
வகை | அமைப்பு |
நாடு | இலங்கை |
மாவட்டம் | மட்டக்களப்பு |
ஊர் | குஞ்சன்குளம் |
முகவரி | குஞ்சன்குளம், மாங்கேணி, மட்டக்களப்பு |
தொலைபேசி | 0776922036 |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
குஞ்சன்குளம் கிராம அபிவிருத்திச் சங்கமானது கிழக்கு மாகாணத்தில் கரையோர வேடர்கள் செறிந்து வாழும் குஞ்சன்குளம் கிராமத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இதன் தற்போதைய தலைவராக க. லிங்கரெத்தினம் அவர்கள் காணப்படுகின்றார். செயலாளராக ம. புவனேந்திரன் அவர்கள் காணப்படுகின்றார். பொருளாளராக சி.ஜெயசீலன் என்பவர் காணப்படுகின்றார். இவ்வமைப்பானது குஞ்சன்குளம் கிராமத்தின் உட்கட்டமைப்பு சார் சகல அபிவிருத்தி செயற்பாடுகளையும் செய்து வருகின்றது. அவ்வகையில் ஆடு, மாடு , கோழி முதலான கால்நடைகளை மாணிய அடிப்படையில் வழங்குதல், உழவு இயந்திரம், உர மாணியம் முதலான நிவாரண உதவிகளை வழங்குதல் போன்ற உதவிகளைச் செய்து வருகின்றது.