நிறுவனம்:அம்/ திரு இருதயநாதர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திரு இருதயநாதர் ஆலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் கல்முனை
முகவரி கல்முனை, அம்பாறை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திரு இருதயநாதர் ஆலயம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ளது. 1850இல் யாழ் ஆயர் பெட்டக்கீனி (Bishop Bettachini) அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை பார்வையிட வந்தபோது அருட்தந்தை புறூணி அவர்களுடன் சொறிக்கல்முனை வரை சென்றார். அவ்வேளையில் கல்முனையில் அவரை இடைமறித்த கல்முனை வாழ் கத்தோலிக்க மக்கள் தங்களுக்கென ஒரு ஆலயம் வேண்டுமென விண்ணப்பித்தனர்.

அதன் அடிப்படையிலே இவ்வாலயம் சுமார் 165 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. ஆரம்பத்தில் இது ஒரு சிற்றாலயமாக இருந்ததுடன் மாரிகாலங்களில் அடிக்கடி பாதிப்புக்குள்ளாவதால் மேடான இடமான கல்முனை கட்டிட திணைக்கள அதிகாரசபைக்கு அருகில் மாற்றப்பட்டது. பின்னர் ஆலயத்தின் சிறப்பான வளர்ச்சி காரணமாக அது மட்டக்களப்பிலிருந்து 1897ம் ஆண்டு பிரிந்து கல்முனையில் ஒரு தனிப்பங்காக இயங்க ஆரம்பித்தது.

1950ம் ஆண்டு பங்குத்தந்தை திரு ஹென்றி பொன்னையா அடிகளார் பழைய ஆலயத்தை இடித்து ஒரு புதிய ஆலயத்தை தோற்றுவித்தார். அக்காலகட்டத்தில் மணற்சேனையில் வசித்த பத்தலோமியஸ் வில்லியம் ஜோஸப் என்பவர் புதிய ஆலயத்திற்கு மாபிள் கல்லினால் ஆன அழகான ஒரு பீடத்தை அன்பளிப்பு செய்தார்.

1954ம் ஆண்டு அக்கரைப்பற்று பங்குத்தந்தை கொட்பிறி குக் என்பவர் ஆலயத்திற்கு ஜேர்மனியில் இருந்து ஒரு பாரிய மணி ஒன்றை நன்கொடையாக வழங்கினார். அப்போது உள்ள பங்குத்தந்தை ஓ.பி.ஸ். சந்தனம் அடிகளார் 70 அடி உயரமான மணிக்கோபுரத்தை அமைத்தார். 1978ம் ஆண்டு வீசிய பெருஞ் சூறாவளியால் ஆலயம் சேதத்திற்குள்ளாகியது.

பின்னர் அருட்தந்தை தியோபிலஸ் றாகல் அவர்களின் துரித முயற்சியினால் தற்காலிக கொட்டில்களை அமைத்து திருப்பலி நிறைவேற்றவும் மறைக்கல்வியைத் தொடர்ந்து நடத்த உதவினார். ஆலய புனரமைப்பில் ஏற்கனவே கிழக்கு திசையில் பார்த்தால் போல் காணப்பட்ட ஆலயத்தை புதிதாக மேற்கு திசை பார்த்த வண்ணம் மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு பின்னர் பெரிய கட்டிடமாக ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு கல்முனை, மணற்சேனை, நற்பிட்டிமுனை போன்ற ஊர்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாக உள்ளது.