ஆளுமை:வேல் நந்தகுமார், வேலும் மயிலும்

From நூலகம்
Name வேல் நந்தகுமார்
Pages வேலும் மயிலும்
Pages வசந்தாதேவி
Birth 1979.03.09
Place புலோலி
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேல் நந்தகுமார், வேலும் மயிலும் (1979.03.09 - ) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர், நடிகர், நெறியாளர். இவரது தந்தை வேலும் மயிலும்; தாய் வசந்தாதேவி. யாழ்ப்பாணம் மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம், ஹாட்லிக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி தமிழ்ச் சிறப்புக் கலைமாணிக் கற்கையைவும் கல்வியியல் டிப்ளோமாக் கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரியில் தற்காலிக இணைப்பில் தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.

இவர் இளங்கோக் கழகத்தில் செயலாளராக இருந்து எட்டுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவரது ஆக்கங்கள் வலம்புரி, சங்குநாதம், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் வடமராட்சியில் தமிழ் ஆசிரியராகவும் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவையின் இளைய ஆலோசக உறுப்பினராகவும் சிறந்த ஒலிபரப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டிகளில் கவிதை, பாடலாக்கம் ஆகியவற்றில் தேசியமட்டச் சிறப்புப் பரிசு, பிரதேச சாஹித்திய விழாப் பரிசுகள், சான்றிதழ்கள் என்பவற்றைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 07