ஆளுமை:வரதபண்டிதர், அரங்கநாதையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதபண்டிதர்
தந்தை அரங்கநாதையர்
பிறப்பு 1656
இறப்பு 1716
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதபண்டிதர், அரங்கநாதையர் (1656 -1716) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த வேதியர் குலப் புலவர். இவரது தந்தையார் பெயர் அரங்கநாதையர். வரதபண்டிதர் தமிழில் இலக்கிய இலக்கணங்களும், சோதிடமும் வைத்தியமும் கற்று பாண்டித்தியம் பெற்றவர். வேதாந்த சித்தாந்த நூல்களும் நன்கு கற்று. அவற்றிலே அனுபவமும் பெற்றவர். பாடுதலில் மிகு சாமர்த்தியம் வாயந்தவர். வாழவுங் கெடவும் பாடவல்லவர். இதனால் இவரை வரகவி என்றும் கூறுவர். சிவராத்திரி புராணம், ஏகாதசி புராணம், கிள்ளைவிடு தூது, அமுதாகரம் (வைத்திய நூல்), பிள்ளையார் கதை ஆகிய நூல்களை இயற்றிப் பாடியுள்ளார். இவைகளேயன்றி, வேறு தனிப்பாக்களும் திருவூஞ்சன்முதலியனவும் இவரால் செய்யப்பட்டுள்ளது. இவரது கிள்ளைவிடு தூது காங்கேசன்துறை குருநாதசுவாமி மீது பாடப்பட்டது. இந்நூல் இவர் வழித்தோன்றலும் இந்திய தேச வாசருமாகிய பண்டிதர் இரத்தினேசுவர ஐயரவர்களால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இவரது குலம் முதலியன இவர் ஆற்றிய அமுதாகரம் என்னும் வைத்திய நூலில் உள்ள சிறப்புப் பாயிரச் செய்யுளின் மூலம் அறியப்படுகின்றது.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 95
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 19-21
  • நூலக எண்: 963 பக்கங்கள் 195