ஆளுமை:யூல்ஸ்கொலின், பிரான்சிஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யூல்ஸ்கொலின்
தந்தை பிரான்சிஸ்
பிறப்பு 1955.12.23
ஊர் பாஷையூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யூல்ஸ்கொலின், பிரான்சிஸ் (1955.12.23 - ) யாழ்ப்பாணம், பாஷையூரைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பிரான்சீஸ். நாடகம், வானொலி- தொலைக்காட்சி நாடக எழுத்துரு ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர், 1967 இலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் திருமறைக் கலாமன்றத்திலும் சரச்சந்திராவின் நாடகக்குழுவிலும் இணைந்து நூறு நாடகங்களுக்கு மேல் நடித்ததுடன் இசை நாடகம், நவீன நாடகம், புராண நாடகம், வட்டக்களரி நாடகம், மௌன நாடகம், ஆங்கில நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார். இவர் பல்கலைரத்னா, கலைஞானச்செல்வன், கலைஞானவித்தகர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 212