ஆளுமை:மொழிவரதன், கருப்பையா

From நூலகம்
Name மொழிவரதன்
Pages கருப்பையா
Pages கண்மணி
Birth
Place மலையகம்
Category எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மொழிவரதன், கருப்பையா மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர், அதிபர், பதிவாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர். இவரது தந்தை கருப்பையா; தாய் கண்மணி. இவர் ஹாலி எல முஸ்லிம் வித்தியாலயம், பதுளை தேசியப் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியானார். இவர் முப்பது வருடங்களுக்கு மேல் அரச சேவையில் கடமையாற்றியுள்ளார்.

60களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய இவர், குழந்தைகளுக்கான பாடற் தொகுப்பான தளிரே தங்க மலரே 2002 ஆம் ஆண்டு வெளியிட்டதுடன் மேக மலைகளின் ராகங்கள் என்ற 9 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்றை 1988 ஆம் ஆண்டும் வெளியிட்டார். இவர் ஒரு நாடும் மூன்று நண்பர்களும் என்ற மூன்று குறுங்கதைகள் அடங்கிய தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3224 பக்கங்கள் 05-06