ஆளுமை:முருகானந்தவேல், சின்னத்துரை
From நூலகம்
Name | முருகானந்தவேல் |
Pages | சின்னத்துரை |
Pages | பார்வதிப்பிள்ளை |
Birth | 1953.02.21 |
Place | புங்குடுதீவு |
Category | வர்த்தகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முருகானந்தவேல், சின்னத்துரை (1953.02.21 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவரது தந்தை சின்னத்துரை; தாய் பார்வதிப்பிள்ளை. இவர் புங்குடுதீவு கணேச வித்தியாலயத்தில் பயின்றவர் ஆவார்.
இவர் கொழும்பு - புங்குடுதீவு அபிவிருத்திச் சங்கம், கணேச வித்தியாசாலை பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் பொருளாளராகவும் அம்மன்கோவில் புனருத்தான சபை அங்கத்தவராகவும் திருக்கேதீஸ்வரம் திருவாசகமடத்தின் பொருளாளராகவும் கொழும்பு மனவளக் கலைமன்ற அறக்கட்டளையின் உறுப்பினராகவும் கொழும்பு வர்த்தக சங்க உப தலைவராகவும் சமாதான நீதவனாகவும் பதவி வகித்துச் சிறப்பாகப் பணியாற்றினார்.
Resources
- நூலக எண்: 11649 பக்கங்கள் 269-270