ஆளுமை:மார்டின் விக்ரமசிங்ஹ

From நூலகம்
Name மார்டின் விக்ரமசிங்ஹ
Birth 1890.05.29
Pages 1976.07.23
Place கொக்கலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்டின் விக்ரமசிங்ஹ (1890.05.29 - 1976.07.23) கொக்கலையைச் சேர்ந்த எழுத்தாளர், தத்துவவியலாளர், கலைஞர், சமூகவியல் ஆய்வாளர். இவர் காலி உனவடுன பொனவிஸ்டா வித்தியாலயத்தில் ஆங்கிலக் கல்வியைக் கற்று கொழும்பில் ஒரு புத்தகசாலையில் எழுதுவினைஞராகச் சேர்ந்தார். இவர் ஆங்கிலப் புத்தகங்களை அதிகமாக வாசித்து பத்திரிகைகளுக்குக் கட்டுரைகளை எழுதியதுடன் பிற்காலத்தில் தினமின, சிலுமின, லக்மின ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்துள்ளார். இவரது நூல்கள், நாவல்கள், சிறுகதைகள் பிரெஞ்சு, சீன, ரூமேனிய, பல்கேரிய, தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகின் பல பகுதிகளிலும் விற்கப்படுகின்றன.

Resources

  • நூலக எண்: 16488 பக்கங்கள் 132-136