ஆளுமை:மார்க்கண்டேயர், இரத்தினம்

From நூலகம்
Name மார்க்கண்டேயர்
Pages இரத்தினம்
Birth 1947.10.24
Place நல்லூர்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மார்க்கண்டேயர், இரத்தினம் (1947.10.24 - ) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். தனது கல்வியை நல்லூர் ஸ்தான சி. சி. த. க. பாடசாலையிலும், சி. எம். எஸ். ஆங்கிலப் பாடசாலையிலும் க. பொ. த. சாதாரணதரம் வரை கற்ற இவர் பின் தவில் இசையை கற்று 40 வருட காலங்கள் சேவையாற்றியுள்ளார்.

இவர் இலங்கை வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் போன்ற இடங்களிலும் இந்தியாவில் கும்பகோணம், திருச்சேறை பெருமாள் கோவில் ஆஞ்சநேயர் உற்சவங்களிலும் மலேசியாவில் ஈப்போ, பத்துக்காஜா சிவசுப்பிரமணியர் திருக்கோவில் வருடாந்த உற்சவங்களிலும் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 98-99