ஆளுமை:மஹிஸா பானு, எம்.எம்

From நூலகம்
Name மஹிஸா பானு
Pages எஸ்.எச்.எம்.முஸ்தபா
Pages ஸீனத்
Birth
Place சம்மாந்துறை
Category கல்வியியலாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மஹிஸா பானு, எம்.எம் அம்பாறை சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை எஸ்.எச்.எம்.முஸ்தபா; தாய் ஷீனத். ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்திலும் உயர் கல்வியை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் கற்றார் அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வணிக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றார். கமு/சது/அல்-அர்சத் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக தனது தொழிலை ஆரம்பித்த மஹிஸா பானு தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியினை முடித்து இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிக் கற்கை நெறியினைத் தொடர்கிறார். கமு/சது/ஜமாலியா வித்தியாலயத்தில் 2018ஆம் ஆண்டு முதல் அதிபராக கடமையாற்றி வருகிறார். சம்மாந்துறை மனிதநேய நற்பணிப் பேரவையின் உயர்கல்வி வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளராக சமூக பணியாற்றி வருகின்றார். தனது ஏழாவது வயதில் எங்கள் வீட்டு பூனை என்ற தலைப்பில் தினகரனின் சிறுவர் உலகம் பக்கத்தில் எழுதிய கவிதையின் ஊடாக இலக்கிய உலகில் பிரவேசித்தார் எழுத்தாளர். பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகளை எழுதியுள்ளார். வானொலி நிகழ்ச்சிகளுக்கு ஆக்கங்களையும் எழுதியுள்ளார். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே கட்டுரை, பேச்சு, நாடகம் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். பல போட்டிகளில் கலந்து கொண்டு முதலாம் இடம், தங்கப்பதக்கங்களையும் பெற்றுள்ளார். சிறுவர் கவிதைகள், சிறுவர் கதைகள் தொகுப்பொன்றை வெகுவிரைவில் வெளியிடவுள்ளார் எழுத்தாளர் மஹிஸா பானு. இவரின் விடைபெற்ற ஒரு வசந்தம் என்ற கவிதை மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் நினைவாக வெளிவந்த ஒரு பகலில் ஒரு சூரியனின் அஸ்தமனம் என்ற நூலில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு மஹிஸா பானு, எம்.எம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.