ஆளுமை:மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம்.

From நூலகம்
Name ஆதம் லெவ்வை முஹம்மது மஸ்ஹது லெவ்வை
Pages ஆதம் லெவ்வை
Pages ஸல்ஹாபீபி
Birth 1958.10.05
Place மாவடிப்பள்ளி, காரைதீவு, அம்பாறை
Category ஊடகவியளாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


மஸ்ஹுது லெவ்வை, ஏ. எம். (பி.1958.10.05) கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம், காரைதீவு மாவடிப்பள்ளி கிராமச் சேர்ந்த ஆதம் லெவ்வை முஹம்மது மஸ்ஹுது லெவ்வை அவர்கள், ஏ. எம்.மஸ்ஹுது லெவ்வை, மாவடியூர் மஸீத் ஆகிய பெயர்களில் எழுதி வரும் இவர் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுள் ஒருவராகவும் மற்றும் ஊடகவியலாளராகவும் காணப்படுகின்றார்.

1958ம் ஆண்டு அக்டோபர் மாதம் 05ம் திகதி ஆதம் லெவ்வை, ஸல்ஹாபீபி தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த மஸ்ஹுது லெவ்வை அவர்கள், சம்மாந்துறை மத்திய கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் போன்றவற்றின் பழைய மாணவராவார். கல்வி டிப்ளோமா பட்டம், தொடர்பு சாதனத்துறை டிப்ளோமாப் பட்டம் என்பவற்றைப் பெற்றுள்ள இவர் ஒரு பட்டதாரி ஆசிரியராவார்.

இவர் கமு, அல்-அஷ்ரப் மகா வித்தியாலயத்தின் ஆசிரியராகப் பணியாற்றினார். அத்தோடு 2002ல் பதவியேற்ற ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் கிழக்கு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட ஊடகத்துறை இணையாசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். கல்முனை ம.மூத் மகளிர் கல்லூரியின் விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியையான சித்தி சமதாவின் அன்புக் கணவரான இவருக்கு, பாத்திமா ஷிப்றா, அஹமட் அனாப், பாத்திமா மினா ஆகிய மூன்று செல்வங்கள் உண்டு.

1996ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் ஈடுபாடு செலுத்தி வரும் இவருக்கு மாவடிப்பள்ளி தினகரன் நிருபர் பதவி 14.01.2002இல் கிடைத்தது. சமூக விழுமியங்களைச் சீரமைத்தல், சமகால அரசியல் நிலைப்பாடுகள், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறை சார்ந்த செய்திகளை எழுதுவதில் இவர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். கடந்தகாலங்களில் தினகரன், நவமணி போன்ற தேசிய பத்திரிகைகளில் சில ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

கண்ணிவெடி பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், இஸ்லாமியக் கண் னோட்டத்தில் பிள்ளை வளர்ப்பு தொடர்பான ஆய்வுக் கட்டுரை போன்றவற்றோடு இனப்பிரச்சினை தொடர்பாகவும், முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பாகவும் பல்வேறு கோணங்களில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். “முஸ்லிம்களை இணைத்துச் செல்வோம் என்று ஒரே ஒரு வார்த்தை சொன்னால் தான் கிழக்கின் சிறுபான்மையினரின் விடிவு கிட்டும்’ எனும் இவரின் கட்டுரை அநேகரின் வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஊடகத்துறையைப் பகுதிநேரமாகக் கொண்டாலும் கூட சமூக உணர்வு மிக்க போக்கினை இவரது கட்டுரைகளில் காண முடிகிறது. இத்தகைய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடும் நோக்கம் இவருக்கு உண்டு.


Resources

  • நூலக எண்: 1666 பக்கங்கள் 63-65


வெளி இணைப்புக்கள்