ஆளுமை:மருதூர்க் கொத்தன்
நூலகம் இல் இருந்து
பெயர் | இஸ்மாயில் |
பிறப்பு | 1935.06.06 |
ஊர் | அனுராதபுரம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இஸ்மாயில், வி. எம். (1935.06.06 - ) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மருதூர்க் கொத்தன் என்ற புனைபெயரால் அறியப்பட்டார். இவர் கல்முனை பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, ஈழநாடு, நவமணி, தாமரை, மல்லிகை, அஞ்சலி, கற்பகம், காலரதம், புதுமை இலக்கியம், களம் ஆகிய பத்திரிகைகளிலும் இதழ்களிலும் வெளிவந்துள்ளன.
இவர் காவியத்தலைவன், மருதூர்க் கொத்தன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), இலக்கிய நயப்புக் கட்டுரைகள் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவர் இலக்கிய வேந்தர், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் வாழ்வோரை வாழ்த்துவோம் விருது, ஆளுநர் விருது ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
மருதூர்க் கொத்தன் பற்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்
வளங்கள்
- நூலக எண்: 2065 பக்கங்கள் 76