ஆளுமை:மயில்வாகனம், இராமநாதர்

From நூலகம்
Name மயில்வாகனம்
Pages இராமநாதர்
Birth
Place நெடுந்தீவு
Category தொழில்நுட்பவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மயில்வாகனம், இராமநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட தொழில்நுட்பவியலாளர். இவரது தந்தை இராமநாதர். இவர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஆவார்.

இவர் தொழில் நுட்ப அதிகாரியாகப் பதவி பெற்று மகாவலி நீர்ப்பாசனத் திட்டம், வளவை நீர்ப்பாசனத் திட்டம் போன்றவற்றிலும் யாழ்.காங்கேசன்துறைச் சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் சீமென்ற் கூட்டுத்தாபனத்தினரால் உயர்திறன் கல்வி பெறுவதற்காக நைஜீரியா அனுப்பி வைக்கப்பட்டார். இவர் அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்ததுடன் பின்னர் கனடாவில் தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 156