ஆளுமை:மனோ, ஜெகேந்திரன்
பெயர் | மனோ |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மனோ, ஜெகேந்திரன் யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகக் கொண்டவர். கவிதை, கட்டுரை, பாடல், வில்லிசை, சிறுகதை, நாடகப் பிரதி எழுதுதல், கவிதை பாட்டு, வில்லுப்பாட்டு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். ஓவியத்தில் ஈடுபாடு கொண்ட இவர் மத்திய கிழக்கில் ஓவிய ஆசியராகப் பணிபுரிந்துள்ளார்.
இவரின் ஆக்கங்கள் இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் பத்திரிகைகளிலும், தமிழ்முரசு, தமிழ்ச்சுடர், பிரகாசம் போன்ற அவுஸ்திரேலிய சஞ்சிகைகளிலும் கலப்பை இதழிலும் வெளிவந்துள்ளது.
பல சிறுகதைகளை எழுதியுள்ள எழுத்தாளர் அவள் ஏன் அலரி மலரானாள், அர்ச்சனைக்கு அவளும் ஒரு மலர் போன்ற குறுநாவல்களையும் எழுதியுள்ளார். இவரின் கவிதை, பாடல், வில்லுப்பாட்டு என்பன பல மேடைகளிலும் வானொலிகளிலும் வெளிவந்துள்ளன. நல்லதோர் வீணை செய்தே என்ற நாவலே இவரின் நூலுருப் பெறும் முதல் நூலாகும்.
படைப்புகள்
வளங்கள்
- நூலக எண்: 2619 பக்கங்கள் 20-21
- நூலக எண்: 7357 பக்கங்கள் 51-59
- நூலக எண்: 2612 பக்கங்கள் 59-67
- நூலக எண்: 2617 பக்கங்கள் 14-16