ஆளுமை:மகாலிங்கம், சின்னத்தம்பி

From நூலகம்
Name மகாலிங்கம்
Pages சின்னத்தம்பி
Birth 1956.12.24
Place இணுவில்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாலிங்கம், சின்னத்தம்பி (1956.12.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இவர் கவிதை எழுதுதல், பட்டிமன்றம் போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டதுடன் 30 வருடம் அனுபவம் வாய்ந்தவராவார்.

இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கு, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி உட்படப் பல இடங்களில் 24 இற்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவரது நாடகங்களான மறுமலர்ச்சி, இறைவன் இருக்கின்றானா, ஏர் சுமந்த தோள்கள், விடியலை நோக்கி, சமாதானம், விதைப்பு போன்றன பல போட்டிகளில் பல பரிசில்களைப் பெற்றுள்ளதோடு நானே ராஜா, இங்கேயும் இப்படி, சீரடையாச் சித்திரங்கள், மார்க்கமொன்று நாம் படைப்போம், கைக்கெட்டியது, கொட்டும் குருதி, வீரத்தின் விளைநிலம், விழிப்பு, போர் புரிய வா, குமணன், அன்னை நிலம் ஆகிய நாடகங்களைப் பிரதியாக்கம், நெறியாள்கை செய்து நடித்துள்ளார். மேலும் இவர் நினைவாகிப்போன நியம், திசை மாறிய விசை போன்ற இரு சிறுகதைகளை எழுதியதுடன் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 205