ஆளுமை:பொன் கனகசபை, அ.

From நூலகம்
Name பொன் கனகசபை
Birth 1917.10.30
Pages 1997.03.15
Place புங்குடுதீவு
Category ஆசிரயர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன் கனகசபை, அ. (1917.10.30 - 1997.03.15) யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர். இவர் 1965 இல் புங்குடுதீவு மத்திய மகா வித்தியாலயத்தில் தமிழ், இலக்கியம், சமயம் போன்ற பாடங்களைக் கற்பித்தார்.

ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இவர், 1974 ஆம் ஆண்டு புங்குடுதீவு இளைஞர் கழகத்தில் தனியார் கல்வி நிறுவனத்தை நிறுவி அதன் பணிப்பாளராக இருந்து சேவையாற்றினார். இவர் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு இளைஞர் கழகம், மகா வித்தியாலயப் பெற்றோர் ஆசிரிய சங்கம், இலங்கை இளைஞர் சங்கம் போன்றவற்றில் உறுப்பினராக இருந்து சேவையாற்றினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 179-180
  • நூலக எண்: 10145 பக்கங்கள் 85-87