ஆளுமை:பொன்னுத்துரை, சின்னன்

From நூலகம்
Name பொன்னுத்துரை
Pages சின்னன்
Pages கண்னகை
Birth 1959.10.23
Place கிளிநொச்சி, புலோப்பளை
Category கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னுத்துரை, சின்னன் (1959.10.23 - ) கிளிநொச்சி, புலோப்பளையைச் சேர்ந்த கூத்துக் கலைஞர். இவரது தந்தை சின்னன்; தாய் கண்னகை. அரிச்சந்திரனாக14 வயதில் நடித்து தன் கலைப்பயனத்தை ஆரம்பித்தார். 30 ஆம் வயதில் ஆறுமுகம் அண்ணாவியார் இன் நேரடி அண்ணாவியத்தில் 1987 இல் முதலாவது மேடை ஏற்றத்தை முருகன் கோவிலில் மேற்கொண்டார். இவர் மேற்கொண்டு தொடர்ச்சியாக 63 மேடைகளில் காத்தவராயன் கூத்து நடித்தும் வருகிறார்.

இவரது சிறப்பான காத்தவராயன் கூத்துக்காக சிறந்த இளம் அண்ணாவி எனும் பட்டத்தை பிரதேச செயலகத்தால் 2006ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டார். மேலும் இவருக்கு பருத்தித்துறை அண்ணாமர் கோவிலில் ரவி குருக்களால் கலைமாணி எனும் கௌரவமும் வழங்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டு தொடக்கம் கலைமகள் கலை மன்றத்துடன் இணைந்து பணிபுரிவதோடு 2000 ஆம் ஆண்டில் கலை மன்றத்தை உருவாக்கியதுடன் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கமைத்து வருகின்றார்.