ஆளுமை:பேரம்பலம்

From நூலகம்
Name பேரம்பலம்
Birth
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பேரம்பலம் ஓர் நாடகக் கலைஞர். ஆரம்பக் கல்வியை முடித்து அர்ச். சூசையப்பர் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற இவர், சர்வகலாசாலையிலும் இலங்கையிலும் இந்தியாவிலும் ஏராளமான நாடகங்களில் நடித்ததோடு பல நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியுள்ளார். இவர் மதுரையில் நடித்துத் தயாரித்த நாடகங்களுள் நரகாசுரன், வள்ளி திருமணம், பக்த துருவன், சிறு தொண்டனார், பிலோமினா அம்பாள் ஆகியவை தமிழ் நாட்டவரால் பாராட்டப்பட்டவை ஆகும்.

இவர் இலங்கை வானொலியில் தமிழ் நாடகங்களிலும் ஆங்கில நடகங்களிலும் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக பங்காற்றி வருகின்றார். 1968 இல் திருநாவுக்கரசு நாயனார் நாடகத்தைத் தயாரித்து அளித்த இவர், சானாவின் சரித்திர நாடகமாகிய சாணக்கியனில் சாணக்கியனாக நடித்துப் பலரது பாராட்டுக்களையும் பெற்றார். இவரிடம் நடிகன், தயாரிப்பாளனுக்கு இருக்க வேண்டிய சகல நற்குணங்களும் காணப்பட்டது.

Resources

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 76-78