ஆளுமை:பெஞ்சமின், சாமுவேல்

From நூலகம்
Name பெஞ்சமின்
Pages சாமுவேல்
Birth 1915.08.08
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெஞ்சமின், சாமுவேல் (1915.08.08 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர், ஓவியர். இவரது தந்தை சாமுவேல். சீன் காட்சிகள் வரைதல், நிறம் தீட்டுதல், சிலைகள் உருவாக்குதல் ஆகிய கலைகளில் ஈடுபட்டு வந்த இவர், 70 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் பணியாற்றி வந்துள்ளார். திருமறைக் கலாமன்றத்தினரின் நாடகங்கள், நாட்டுக்கூத்துக்கள், கலை நிகழ்வுகளுக்குப் பணியாற்றியுள்ள இவர், வடக்குக் கிழக்கு மாகாண அரசின் கலாச்சாரத் திணைக்களத்தில் ஓய்வூதியம் பெறும் கலைஞராவார். இவர் 1996 இல் திருகோணமலை கலாச்சாரப் பிரிவினால் ஒப்பனைக் கலை வேந்தன் என்னும் பட்டத்தைப் பெற்றுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 260