ஆளுமை:பூர்ணிமா, கருணாகரன்
பெயர் | பூர்ணிமா |
தந்தை | திருநாவுக்கரசு |
தாய் | யோகேஸ்வரி |
பிறப்பு | 1967.09.29 |
ஊர் | இணுவில் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பூர்ணிமா, கருணாகரன் யாழ்ப்பாணம் இணுவிலில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை திருநாவுக்கரசு; தாய் யோகேஸ்வரி. ஆரம்பக் கல்வியை கொழும்பு புளுமென்டல் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் உயர் கல்வியை மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையிலும் கல்வி கற்றார். கல்வி கற்கும் போதே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ள பூர்ணிமா கவிதை, கதை, கட்டுரை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் சிந்தாமணி, தினமுரசு, வீரகேசரி, தினகரன் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்துள்ளன. 1996ஆம் ஆண்டில் தனது பேனாமுனைக்கு ஓய்வு கொடுத்த எழுத்தாளர் 2017ஆம் ஆண்டு மீள்பிரவேசம் செய்துள்ளார். பெட்டைக் காகங்கள் இடும் குயில் குஞ்சுகள் என்ற கவிதைத் தொகுப்பை 2018ஆம் ஆண்டு வெளியிட்டார். முகநூலில் பெருமளவான கவிதைகளை எழுதி வருகிறார். இவரின் எழுத்து பெண்கள் சார்ந்ததாக இருப்பது சிறப்பம்சமாகும். கவிக்குழும விருதுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். மிக விரைவில் சிறுகதையொன்றை வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கின்றார் எழுத்தாளர்.
படைப்புகள்
- பெட்டைக் காகங்கள் இடும் குயில் குஞ்சுகள் (கவிதைத் தொகுதி)
குறிப்பு : மேற்படி பதிவு பூர்ணிமா, கருணாகரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.