ஆளுமை:பீதாம்பரம், இராசையா

From நூலகம்
Name பீதாம்பரம்
Pages இராசையா
Birth 1936.03.21
Place குரும்பசிட்டி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பீதாம்பரம், இராசையா (1936.03.21 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை இரசையா. இவர் யாழ்ப்பாணம் மாநகரசபை நூலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். 1950 ஆம் ஆண்டுகளில் நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர், வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தை உருவாக்கி அதன் மூலம் பல நாடகங்களை மேடையேற்றினார்.

இவர் வீரமைந்தன், திப்புசுல்தான், சரியா தப்பா, இன்பக் கனவு, இடிந்த கோவில், மிஸ்டர் கந்தப்பு, பரியாரியார் பரமசிவம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு கதாநாயகன் பாத்திரத்தில் நடித்துத் தனது ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நாடகக் கலை அனுபவங்களைப் பாராட்டி 1994 ஆம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையினர் நடிகமாமணி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்துள்ளனர். இவரின் கலைப்பணியைக் கௌரவித்து நல்லூர் பிரதேச செயலகக் கலாச்சாரப் பேரவை கலைஞானச்சுடர் என்ற பட்டத்தை 2005 ஆம் ஆண்டு வழங்கியது.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 159