ஆளுமை:பிச்சையப்பா, வேலாயுதம்
நூலகம் இல் இருந்து
பெயர் | பிச்சையப்பா |
தந்தை | வேலாயுதம் |
தாய் | நாகரத்தினம் |
பிறப்பு | 1934 |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிச்சையப்பா, வேலாயுதம் (1934 - ) வயலின் கலைஞர். இவரது தந்தை வேலாயுதம்; தாய் நாகரத்தினம். இவர் பிடிற் சக்கரவர்த்தி புத்துவாட்டி சோமசுந்தரத்திடம் வயலின் இசையைக் கற்று இலங்கை, தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கெல்லாம் பக்கவாத்தியம் வாசித்திருக்கின்றார். இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1962 - 1987 காலப்பகுதியில் வாத்தியக் கலைஞராகவும் இசையமைப்பாளராகவும் வாத்திய இசைக்குழுப் பிரதித் தலைவராகவும் கடமையாற்றியவர். இவர் 'நல்லை நகர் தாஸன்' என்ற புனைபெயரில் சஞ்சாரி கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள், ஸ்வரஜதி, தில்லானா என்பவற்றை இயற்றியிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 567