ஆளுமை:பிச்சையப்பா, பெரியசாமி
பெயர் | பிச்சையப்பா |
தந்தை | பெரியசாமி |
பிறப்பு | 1933.03.27 |
இறப்பு | 2003.05.13 |
ஊர் | நவின்டில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பிச்சையப்பா, பெரியசாமி (1933.03.27 - 2003.05.13) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை பெரியசாமி. இவர் நல்லை ஆதீனத்தின் முதலாவது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமி நாத தம்பிரான் சுவாமிகளின் சங்கீத கதாப்பிரசங்கத்திற்கு முப்பத்தைந்து வருடங்கள் முகவீணை இசைத்துப் பக்க வாத்தியக் கலைஞராகச் செயற்பட்டார். அத்தோடு இலங்கையின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் முதற்தர நாதஸ்வரக் கலைஞராக முப்பது வருடங்கள் சேவையாற்றியுள்ளார். இவர் முகவீணையில் அதிசிறந்த பக்கவாத்தியக் கலைஞராக இருந்துள்ளார்.
இவரது நாதஸ்வர இசையைப் பாராட்டித் திருகோணமலை பன்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகம் 1972 ஆம் ஆண்டு இசை ராகஞான வாருதி என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்தது. மேலும் இவரது நாதஸ்வர நிகழ்ச்சி 1974 ஆம் ஆண்டு கெக்கிராவைப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற போது அவ்வாலய நிர்வாகம் இன்குழல் வேந்தன் என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவித்ததுடன் நல்லை பால கதிர்காம நிர்வாகம் மதுரகான கலைச்செம்மல் என்ற பட்டத்தையும் நல்லை ஆதீனம் நாதஸ்வர இளவரசு என்ற பட்டத்தையும் யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றம் இசைநாவேந்தன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன. இவர் இந்து சமயக் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் கலைக்கான தேசிய விருதான கலாபூஷணம் விருதை 2002 ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 90