ஆளுமை:பாத்திமா, சஹாரா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாத்திமா சஹாரா
தந்தை முஹம்மது சமுஹுன்
தாய் சித்தி பஸீனா
பிறப்பு
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாத்திமா, சஹாரா புத்தளம் புளிச்சாக்குளத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது சமுஹுன்; தாய் சித்தி பஸீனா. கவிச்சாரல் சாரா எனும் புனை பெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை புளிச்சாக்குளம் உமர் பாரூக் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தற்பொழுது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் பொதுத்துறையில் கல்வி கற்கின்றார். பாடசாலைக் காலத்திலேயே கவிதைத் துறையில் ஆர்வமுடையவராக இருந்தாலும் கட்டுரைகளை எழுதுவதிலேயே அதீத ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டார். பின்னர் பல்கலைக்கழக நுழைவின் பின்னரே கவிதைத்துறைக்குள் பிரவேசித்தார். இவரின் முதலாவது கவிதை ”சுகமான சுமைகள்” என்ற தலைப்பிலான வெளிநாட்டில் வேலைபார்ப்பவர்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கவிதை மெட்ரோ பத்திரிகையில் முதல் முதலாக வெளியாகியது. மேலும் இவரின் கவிதைகள் இலங்கையில் மட்டுமின்றி இந்தியாவிலும் அறியச் செய்யும் ஊடகமாக முகநூல் குழுமம் தளமாக அமைந்துள்ளதெனத் தெரிவிகின்றார் எழுத்தாளர். தினகரன், மித்திரன், மெட்ரோ போன்ற பத்திரிகைகளிலும் இவரின் கவிதைகள் வெளிவந்துள்ளதுடன், நெய்தல், உலகப்பாவலர் மன்றம், தென்றலின் வீதியில், ஆகாயக் கனவுகள், ஊற்று, கொலுசு, தமிழருவி, தேடல், மூங்கில் கவிதைகள் போன்ற மின்னிதழ்களிலும் மலர்வனம் என்ற கவிதைத் தொகுப்பிலும் சாளரம், அல் இஸ்லாங் (இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்) மாதாந்த சஞ்சிகையிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி உள்ளன. 2018ஆம் ஆண்டு விழிகள் தேடும் விடியல் எனும் கன்னிக் கவிதைத் தொகுப்பை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் மாணவர் பேரவை ஊடாக வெளியிட்டள்ளார். இக்கவிதைத் தொகுப்பு முழுக்க முழுக்க சமூகம் சார்ந்ததும் பெண்ணியம் சார்ந்த ஒரு புரட்சிக் கவிதை நூல் எனக் கூறுகிறார் எழுத்தாளர். நூறு வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி வரலாற்றைக் கொண்ட இவரின் பிறந்த ஊரான புளிச்சங்குளம் கிராமத்தில் தனி ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் புத்தகம் எனும் வரலாற்று சாதனையிலும் நூல் ஒன்றை வெளியிட்டதன் ஊடாக இடம்பிடித்துள்ளார். தற்பொழுது சிறுகதைகளையும் எழுதி வருகிறார். இவரின் முதலாவது சிறுகதை ”கெம்பஸ் போண புள்ள வேணாம்” எனும் தலைப்பில் அமைந்துள்ளது.

விருதுகள்

சிந்தனைக்கவி விருது- ஊ ல ழ ள குழுமம். தமிழ் கவிச்சுடர் விருது -உலகப்பாவலர் தமிழன்னை தமிழ்ப் பேரவை குழுமம். கவிச்சரம் விருது -டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூங்கா குழுமம். வித்தகக் கவி விருது- கம்பன் கவிக்கூடம் குழுமம். கவிச்சிகரம் விருது -சங்கத்தமிழ் கவிதைப் பூங்கா குழுமம். ஹைக்கூ கவிதைக்காக கவிச்சரம் விருது -கவிமலர்கள் குழுமத்தின் ஊடாக.

குறிப்பு : மேற்படி பதிவு பாத்திமா, சஹாரா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:பாத்திமா,_சஹாரா&oldid=315421" இருந்து மீள்விக்கப்பட்டது