ஆளுமை:பற்றிக் லெம்பேட், சவிரியன்
பெயர் | பற்றிக் லெம்பேட் |
தந்தை | சவிரியன் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பற்றிக் லெம்பேட், சவிரியன் மன்னார் வங்காலை -01 யைச் சேர்ந்த கலைஞர். மன்னார் புனித ஆனாள் வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கற்றார். யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் சுருக்கெழுத்து தட்டெழுத்து பயிற்சியினை நிறைவு செய்துள்ள இவர் கிளிநொச்சி விவசாய பாடசாலையில் ஒருவருட பயிற்சி நெறியில் சித்தியடைந்துள்ளார். வவுனியாவில் விவசாய டிப்ளோமா பாடநெறியினை முடித்துள்ளார். கிராமசேவகராக 33 வருடங்கள் அரச சேவையில் இருந்து சமூசேவையாற்றியுள்ளார்.
நாடக நெறியாளரும் மறை சமூக பணியாளருமாக உள்ளார். நாடகப் பிரதி ஆக்கம், கவியரங்குகளில் கலந்துகொள்ளல், வில்லுப்பாட்டுக்கள்-நகைச்சுவை நாடகங்கள், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கள், நாடகங்களில் நடித்தல் என பன்முகத் திறமைகளைக்கொண்டவர். தீவிரவாதி, சாட்சிகள், முத்துசிப்பி, தானியேல், சங்காரம், நிஜங்கள், வீரம் விளைந்த மண், யோசப்வாய் ஆகிய குறுநாடங்களையும் திரௌபதியின் திருமணம், விசுவாசத்தின் தந்தை, அபிமன்யு வதை, இந்திரஜித், ஏகலைவன் ஆகிய நாட்டுக் கூத்துகளும், பேராசை, மீண்டும் போன்ற நகைச்சுவை நாடகங்களையும் எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.
கவி வாழ்த்துப்பாக்களையும், அஞ்சலி பாக்களையும் எழுதியுள்ளார். 2014ஆம்ஆண்டு கல்வாரியின் காவியம் திருப்பாடுகளின் காட்சி நாடகத்தை ஆறு மணிநேரம் கொண்ட காட்சிகளை எழுதி மேடையேற்றியதுடன் வின்சன்ட் லெட்பேட் அவர்களுடன் இணைந்து நெறியாள்கையும் செய்துள்ளார். நானாட்டான் பிரதேச சபைக்கீதத்தையும் எழுதியுள்ளார்.
விருதுகள்
செழுங்கலை வித்தகர் – நானாட்டான் கலாசாரப் பேரவை – 2017.
தமிழ்இலக்கிய மன்றம் மொறட்டுவ பல்கலைக்கழகம் சொற்கணை நினைவுச்சின்னம் – 2017.
வெளி இணைப்புக்கள்