ஆளுமை:பர்வதாமணி, வன்னியகுலம்

From நூலகம்
Name பர்வதாமணி, வன்னியகுலம்
Pages தம்பிஐயா, சபாபதி
Pages பர்வதா
Birth 11.05.1948
Pages -
Place அல்வாய்
Category எழுத்தாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பர்வதாமணி, வன்னியகுலம் (1948.05.11) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர்.இவர் தேவரையாளி இந்துக் கல்லூரி பருத்தித்துறை மெதடிஸ்த மிஷன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுள்ளார். மேலும் பல்கலைக்கழகல் படிப்பில் முதலாம் வருடம் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இரண்டாம், மூன்றாம் வருடங்கள் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்று பொதுகலைமாணி பட்டம் பெற்றுள்ளார்.

தனது 28ஆவது வயதில் திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தராக வடமராட்சி, கரவெட்டி, பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் 8 வருடங்களும், முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச செயலகம், முல்லைத்தீவு கச்சேரி ஆகிய இடங்களில் 5 வருடங்களும், திருகோணமலை மாகாண சபையில் 9 வருடங்களும், கொழும்பு திட்டமிடல் அமைச்சில் உதவிப் பணிப்பாளராக 11 வருடங்களும், அங்கேயே 1 வருடம் திட்டமிடல் பிரதி கல்விப் பணிப்பாளராக 1 வருடமும் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் தனது தந்தையாரோடு பல நாடகங்களில் நடித்துள்ளதோடு மல்லாகம், கிளிநொச்சி, பரந்தன், நெல்லண்டப் பத்திரகாளி அம்மன் ஆலயம், வதிரி போன்ற இடங்களில் தனது நடிப்பாற்றலை வெளிக்காட்டியுள்ளார்.