ஆளுமை:பத்தினியம்மா, திலகநாயகம் போல்
Name | பத்தினியம்மா, திலகநாயகம் போல் |
Pages | சிதம்பரப்பிள்ளை |
Pages | பார்வதிப்பிள்ளை |
Birth | 1944.05.09 |
Pages | 2013.11.02 |
Place | கரவெட்டி |
Category | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|

பத்தினியம்மா, திலகநாயகம் போல் (1944.05.09 - 2013.11.02) யாழ்ப்பாணம், கரவெட்டியைச் பிறப்பிடமாகவும் ஆனைக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரப்பிள்ளை; தாய் பார்வதிப்பிள்ளை. பேராதனைப் பல்கலைக்கழகக் கலைப்பட்டதாரியான இவர், பாலபண்டிதர், சைவப்புலவர் பரீட்சைகளில் சித்தியெய்தியவர். இவர் நிர்வாக சேவையில் இணைந்து பலவருடம் பிரதேச செயலாளராகப் பணியாற்றிப் பின்னர் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றார்.
இவர் 'சிதம்பர பத்தினி' என்ற புனைபெயரில் 1963களிலிருந்து எழுத ஆரம்பித்தார். இவரின் சிறுகதைகளின் கருவாகப் பெண்ணியம், காதல், குடும்பம் போன்றவைகள் அமைந்தன. இவர் சுதந்திரன், ஈழநாடு, தினகரன், நங்கை முதலான பத்திரிகைகளில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். இவற்றில் தெளிவு, அண்ணா, நிஜமும் நிழலும், மன்னிப்பு , எரியகம், கல்லறை, அனர்த்தம், என்ன தவறு செய்தேன், பகுத்தறிவு போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவரின் சிறுகதைகள் 'நிஜமும் நிழலும்' என்னும் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இவர் சிறுவர் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு நிஜத்தின் நிழல், தேன்வதை, மழலை அமுதம் ஆகிய சிறுவர் இலக்கியங்களை எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
Resources
- நூலக எண்: 300 பக்கங்கள் 173-175
- நூலக எண்: 7571 பக்கங்கள் 54
- நூலக எண்: 15444 பக்கங்கள் 37
- நூலக எண்: 10174 பக்கங்கள் 31
- நூலக எண்: 16946 பக்கங்கள் 53-54