ஆளுமை:நீர்வைப் பொன்னையன்
பெயர் | நீர்வைப் பொன்னையன் |
பிறப்பு | 1930 |
ஊர் | நீர்வேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நீர்வைப் பொன்னையன் (1930 - ) யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த முற்போக்குச் சிந்தனையாளர். இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றுக் கல்கத்தா சர்வகலாசாலையின் பி. ஏ. பட்டதாரியாவார். இவர் கலைமதி, வசந்தம் ஆகிய முற்போக்குக் கலை இலக்கியச் சஞ்சிகைகள் மூலம் தன் பணியை ஆற்றினார். இவர் தேசாபிமானி, தொழிலாளி ஆகிய அரசியல் வாரப் பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றி ஆக்கபூர்வமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
1969 இலிருந்து 1983 வரை அரச திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் மொழிப்பெயர்ப்பாளராகப் பணியாற்றிய இவர், 1996 இல் விபவி கலாச்சார மையத்தில் தமிழ்ப்பிரிவின் இணைப்பாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். இவரது மேடும் பள்ளமும் என்ற முதலாவது சிறுகதைத் தொகுதி 1961 இல் வெளிவந்ததைத் தொடர்ந்து மூவர் கதைகள், பாதை, வேட்கை, உலகத்து நாட்டார் கதைகள், முற்போக்கு இலக்கிய முன்னோடிகள், நாம் ஏன் எழுதுகின்றோம்? ஆகிய படைப்பிலக்கியங்களைப் படைத்துள்ளார். மேலும் இவர் இதுவரையில் சுமார் 100 சிறுகதைகளை எழுதியிருக்கின்றார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 515
- நூலக எண்: 394 பக்கங்கள் 25-28