ஆளுமை:நாகலிங்கம், நா. கா.

From நூலகம்
Name நாகலிங்கம்
Birth 1892.10.18
Pages 1961.04.02
Place புங்குடுதீவு
Category வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நாகலிங்கம், கா. (1892.10.18-1961.04.02) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட வர்த்தகர். இவர் ஆரம்பத்தில் கொழும்பில் சில காலம் கடைச் சிப்பந்தி வேலை செய்து தனது 26 ஆவது வயதில் பொரளையில் தனியாகக் கடையொன்றை ஆரம்பித்தார். பின்பு தனது சகோதரன் கா. கணபதிப்பிள்ளையுடன் சேர்ந்து தொழில் செய்த இவர், ஆறு கடைகளுக்குச் சொந்தக்காரரானார்.

இவர் கொழும்பில் கதிர்காமர் யாத்திரிகர் தொண்டர் சபையை ஏற்படுத்தி அதன் முதலாவது தலைவராகப் பணியாற்றியதுடன் அகில இலங்கை புங்குடுதீவு மகாசபை என்ற அமைப்பையும் ஏற்படுத்தினார். அத்தோடு புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தைப் புனருத்தானம் செய்தமை, கண்ணகை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவராக இருந்து சேவையாற்றியமை போன்ற பல சமய, சமூகச் சேவைகளைச் செய்தார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 256