ஆளுமை:தேவா

From நூலகம்
Name தேவா
Pages இரா.சுப்பையா
Pages காந்திமதி
Birth
Pages -
Place நீர்கொழும்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Theva.jpg

தேவி, எழுத்தாளர்.இவரது தந்தை இரா.சுப்பையா; தாய் காந்திமதி. நீர்கொழும்பு- தமிழ்ப்பாட சாலையில் தற்போது விஜயரத்தினம் மகாவித்திலாயம் நீர்கொழும்பு ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் அவரது ஆரம்ப கல்வியையும். நீர்கொழும்பில் இருந்த-இன்னும் இருக்கிற ஒரேயொரு விவேகானந்த வித்தியாலயம் தமிழ்ப்பாட சாலையில் இறுதிவகுப்பு கல்விகற்றார். தொடர் கல்விக் கூடம் மைல் தூரதலிருந்ததாலும் அது ஒரு இஸ்லாமிய பாடசாலையாய் இருந்ததாலும் இவருக்கான -பெண்ணுக்கான மேல் கல்வி தொலைந்துபோனது. தனது பாடசாலைக்கல்வியை முடித்துக்கொண்டு முப்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஜேர்மனியில் வாழும் இவருக்கு இந்தப்புலம்பெயர் வாழ்வு ஒரு தற்செயலானது.ஒரு பரந்த உலகை தரிசிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக இதை கருதுகின்றார். பாடசாலைக்காலத்திலே துப்பறியும் நாவல்களில் ஆரம்பித்த இவரது வாசிப்பு கல்கியின் நாவல்களை தாண்டி மு.வரதராசனாரிடம் மோதி ஜெயகாந்தனிடமும் அது முற்றுப்பெறவில்லை. மாக்சிம் கோர்கி டோல்ஸ்டோய்யை வாசிக்க தொடங்கிய பின்னரே சிந்தனைக்கான உரம் கிடைத்தது,தேடி வாசித்தல் முன்னுரிமை பெற்றது என கூறுகின்றார். எழுத்தாளரும் உறவினருமாகிய லெ.முருகபூபதி கொடுத்த ஊக்கமும் ஒரு முகமறியா பேனாநண்பனின் தோழமையும் இவரது எழுத்தையும் வாசிப்பையும் வளம்பட வைத்தது. தாயகத்திலே மல்லிகை, தினபதி, வீரகேசரி, தினகரன், புதுயுகம் ஆகியவைகளில் இவரது ஆக்கங்கள் தேவி எனும் பெயரில் வெளியீடனது. இதனால் இவரது எழுதும் ஆற்றல் மேலும் ஊக்குவிக்கப்பட்டதாக கூறூகிறார்.

இன்றுவரை புலம்பெயர்நாட்டிலும் இவரது இலக்கிய ஆர்வம் பெண்ணியம், தலித்தியம் ஒடுக்குமுறைக்கெதிரான வாசிப்பில் ஈடுபாடு தொடர்கிறது. இவர் சந்தித்த அனுபவங்களயும் அதனின் ஆழத்தை தொடும் முயற்சிகளை எழுத்தில் வைப்பதுமாக இயன்றவரை முயன்றுகொண்டிருக்கின்றார்.

ஆரம்பகாலத்தில் இவரது எழுத்துக்கள் பாரிஸ் ஈழநாடு பத்திரிகையிலும், பின்னர் தேனீ, ஊதா, அஆஇ, உயிர்நிழல், எக்சில், சஞ்சிகைகளிலும் பெண்கள்சந்திப்பு மலர்களிலும் அதன் சிறுகதைத் தொகுப்புக்களிலும் வெளியாகி இருக்கிறது. கார்ஸ்ரூகேயில் சில பெண்கள்சந்திப்புக்களை ஒழுங்கு செய்து நடத்தியுள்ளார். ஊடறு இணையத்தளத்திலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 2005 - 2013 வரை ஊடறுவின் இணையத்தளத்தின் ஆசிரியராக றஞ்சியுடன் இணைந்து செயற்பட்டுள்ளார்.