ஆளுமை:தெணியான், கந்தையா
பெயர் | தெணியான் |
தந்தை | கந்தையா |
தாய் | சின்னம்மா |
பிறப்பு | 1942.01.06 |
ஊர் | பொலிகண்டி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தெணியான், கந்தையா (1942.01.06 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை, பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர், விரிவுரையாளர். இவரது தந்தை கந்தையா; தாய் சின்னம்மா. இவரது இயற்பெயர் நடேசன் ஆகும். இவர் தேவரையாளி சைவ வித்தியாசாலையில் (இன்று தேவரையாளி இந்துக் கல்லூரி) கல்வி பயின்றார்.
இவர் 1964 ஆம் ஆண்டு விவேகி சஞ்சிகையில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் எழுத ஆரம்பித்து, ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கின்றார். தொடர்ந்து நாவல், குறுநாவல், வானொலி நாடகங்களுடன் நிருத்தன் என்னும் புனைபெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். ஈழத்துத் தமிழ் இலக்கியமும் அதன் தலைமையும் அதன் தவறுகளும் என்னும் தலைப்பில் 1977, ஏப்ரல் தொடக்கம் 1978 வரை மல்லிகை இதழில் ஒரு விவாதக் கட்டுரையை எழுதினார். தினக்குரல் பத்திரிகையில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரை எழுதியதுடன் "சிதறல்கள்", "கானலில் நீர்" முதலான நாவல்களையும் எழுதியுள்ளார்.
இவரது இலக்கிய ஆளுமையைக் கெளரவித்து சாகித்திய மண்டல விருது, மக்கள் படைப்பாளி விருது, கலாபூஷணம் விருது ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 446
- நூலக எண்: 13844 பக்கங்கள் 188-190
- நூலக எண்: 15444 பக்கங்கள் 36
- நூலக எண்: 5973 பக்கங்கள் 156
- நூலக எண்: 393 பக்கங்கள் 22-24
- நூலக எண்: 2043 பக்கங்கள் 18