ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா.

From நூலகம்
Name துரைசிங்கம்
Pages தம்பிராசா
Pages சிவபாக்கியம்
Birth 1937.04.09
Place புங்குடுதீவு
Category ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரைசிங்கம், தம்பிராசா (1937.04.09 - ) புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர். இவரது தந்தை தம்பிராசா; தாய் சிவபாக்கியம். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் கற்று, நல்லூர் ஆசிரியர் கலாசாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராகப் பயின்று 1959 இல் வெளியேறினார்.

இவர் பத்திரிகை நிருபராகத் தனது வாழ்க்கையை ஆரம்பித்துப் பின்னர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 1997.08.03 இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராகப் பணியார்றினார்.

இவர் 1954 ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவுக் கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதைத் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபடத் தொடங்கிக் கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். அவற்றில் நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டலப் பரிசுகள் கிடைத்துள்ளன.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 182-183
  • நூலக எண்: 14014 பக்கங்கள் 03-05