ஆளுமை:தில்லைராஜன், இராசதுரை
நூலகம் இல் இருந்து
பெயர் | தில்லைராஜன் |
தந்தை | இராசதுரை |
பிறப்பு | 1951.04.17 |
ஊர் | யாப்பாணம், நீர்வேலி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தில்லைராஜன், இராசதுரை (1951.04.17) யாழ்ப்பாணம் நீர்வேலி வடக்கைச் சேர்ந்த எழுத்தாளர். ஆரம்பத்தில் இரங்கற் பாக்கள் எழுதி வந்தார். இனியபாவை, நவராத்திரி மகத்துவம், தீபாவளித் திருநாள், வாழும் கலை, வில்லிசையில் நல்லிசை, திருத்தல் மகிமை, நாயன்மார் நால்வர், சபாஸ் கலா விநோதன், அன்னை, காந்தியின் வாழ்விலே போன்ற தமிழ் சமயக் கட்டுரைகள் இவர் எழுதினார்.
நீர்வேலி வடக்கு காளியம்மன் கோயிலுக்குரிய ஊஞ்சற்பாடல்களும் இவரால் வெளியிடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடைநிலை கற்கை நெறி பயிலும் போது துலங்கல் என்னும் சஞ்சியை வெளியிட்டுள்ளார். இவரின் இலக்கியத்துறை சார் கட்டுரைகள் 1970ஆம் ஆண்டு தொடக்கம் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 76254 பக்கங்கள் 77-78