ஆளுமை:திருநாவுக்கரசு, அம்பலவாணர்

From நூலகம்
Name திருநாவுக்கரசு
Pages அம்பலவாணர்
Pages செல்லம்மா
Birth
Place புங்குடுதீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, அம்பலவாணர் புங்குடுதீவு 1 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சமயப் பெரியார். இவரது தந்தை அம்பலவாணர்; தாய் செல்லம்மா. இவர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் வேலணை மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றதோடு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுத் தருமபுர ஆதீனத்தில் சிறப்புக் கல்வி பெற்றார். புலவர் பட்டம் பெற்ற இவருக்குக் கலாச்சார அமைச்சு சிவநெறிப்புலவர் என்றும் திருவாவடுதுறை ஆதீனம் சிவஞானச்செல்வர் என்றும் பட்டங்களை வழங்கியுள்ளன.

இவர் 1964 ஆம் ஆண்டு முதல் திருக்கேதீஸ்வர ஆலயத்துடன் தொடர்பு கொன்டு ஆலயத்தின் திருப்பணிச் சபையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றியதோடு அகில இலங்கை இந்து மாமன்றம், இந்து வெளியீட்டுக் குழு, கொழும்பு தமிழ்ச் சங்க ஆட்சிக் குழு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்துள்ளார். இவர் தென்னாபிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மாலைதீவு போன்ற நாடுகளில் நடைபெற்ற சைவ இலக்கிய மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார்.

இவர் பெரியநாவற்குளம் கிராமோதய சபையை திருக்கேதீஸ்வரம் கிராமோதய சபை என்று பெயர் மாற்றி அதன் முதற் தலைவராகவும் உறுப்பினராகவும் பணியாற்றியதுடன் திருக்கேதீஸ்வரம் கிராம அபிவிருத்திச் சங்கம், கிராம முன்னேற்றச் சங்கம், நலன் புரிச் சங்கம் போன்ற பல சங்கங்களின் தலைவராக இருந்து சமய, சமூகப் பணிகள் ஆற்றினார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 139-140