ஆளுமை:தியாகராசன், வைத்தியலிங்கம்

From நூலகம்
Name தியாகராசன்
Pages வைத்தியலிங்கம்
Birth
Place சரவணை
Category புலவர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தியாகராசன், வைத்தியலிங்கம் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞர், அதிபர். இவரது தந்தை வைத்தியலிங்கம். இவர் தனது இருபது வயதில் சுதந்திரன் ஏடு நடத்திய கதைப் போட்டியில் பங்குபற்றிச் சதங்கை ஒலி என்ற கதை மூலம் பிரபலமானார்.

இவர் 1950களில் தமிழன் என்ற மாசிகையை (மாத இதழ்) ஆரம்பித்து அதன் இணையாசிரியராகவும் வெளியீட்டாளராகவும் பணியாற்றினார். இவர் எழுதும் ஆசிரியத் தலையங்கங்கள் தந்தை செல்வா போன்ற பெருந் தலைவர்களால் பாராட்டுப் பெற்றன. இவரைத் தெரிந்தோர் இவரைத் தமிழன் தியாகு என்றே அழைத்தனர். பிரதமர் டி.எஸ்.சேனநாயகாவின் யாழ் வருகையை எதிர்த்துக் கறுப்புக்கொடி காட்டியதால் கைது செய்யப்பட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

Resources

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 18