ஆளுமை:தாமோதரம்பிள்ளை, சின்னத்தம்பியார்

From நூலகம்
Name தமோதரம்பிள்ளை
Pages சின்னத்தம்பியார்
Pages அன்னம்மையார்
Birth 1863
Pages 1921
Place வண்ணார்பண்ணை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமோதரம்பிள்ளை, சின்னத்தம்பியார் (1863 - 1921) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பியார்; தாய் அன்னம்மையார். இவர் ஐந்தாவது வயதில் நாவலரால் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார்.

இவர் சிதம்பரத்திற்கு மேற்கே எட்டு மைல் தொலைவில் உடையூர்க் கிராமத்தில் ஒரு பாடசாலையை நிறுவி நடாத்தி வந்தார். பின் சென்னையில் சபாபதி நாவலர் தாபித்து நடத்தி வந்த சித்தாந்த வித்தியானுபாலன யந்திரசாலையில் அவர் பிரசுரித்து வந்த ஞானாமிர்தம் பத்திரிகையின் ஆசிரியராகவும் அதிபராகவும் அமர்த்தப்பட்டார். சமய ஆக்கம் கருதி விஜயத் துவஜம் என்னும் பெயரில் பத்திரிகை ஒன்றினை நடாத்தி வந்தார். நீண்ட காலத்தின் பின்னர் இலங்கைக்கு திரும்பிய இவர், கொழும்பில் தங்கியிருந்து சைவப்பணி ஆற்றினார். இவரால் யாழ்ப்பாணம் கரவெட்டியில் தொடங்கப்பெற்ற பாடசாலையே விக்னேஸ்வராக் கல்லூரி ஆகும்.

இவரால் சத்தியாவந்தன ரகசியம், சைவசிராத்த ரகசியம், சிவஞான சித்தியார் உரை, கதிர்காம புராண வசனம், சைவசித்தாந்த சாரமான மரபு போன்ற நூல்கள் இயற்றப்பட்டன.

Resources

  • நூலக எண்: 963 பக்கங்கள் 150-152