ஆளுமை:தவச்சிறி, சார்ள்ஸ் விஜயரட்ணம்

From நூலகம்
Name தவச்சிறி
Pages இரத்தினம்
Pages தங்கரத்தினம்
Birth 1964.05.10
Place யாழ்ப்பாணம்
Category சமூகசேவைாயளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தவச்சிறி, சார்ள்ஸ் விஜயரட்ணம் (1964.05.10) கிளிநொச்சி, திருநகரில் பிறந்த சமூகசேவையாளர். இவரது தந்தை இரத்தினம்; தாய் தங்கரத்தினம். தவச்சிறி அவர்கள் தொண்டர் மருத்துவ தாதியாக கடமையாற்றியுள்ளார். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கற்றார். தவச்சிறி சார்ள்ஸ் விஜயரட்ணம் வன்னியில் பல்வேறு சமூக அமைப்புகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்து வருகிறார். கிளிநொச்சி மாவட்ட மாதர் சங்கங்களின் இணைச்செயலாளராகவும் கிளிநொச்சி மகளிர் அமைப்பின் பொருளாளராகவும் இருந்துள்ளார். திருநகர் வடக்கு மாதர் சங்கத்தின் தலைவியாகவும் பொருளாளராகவும் ஒன்பது வருடங்கள் இருந்துள்ளார் தவச்சிறி. சிக்கன கடன் உதவி கூட்டுறவுச் சங்கத்தின் திருநகர் வடக்கின் தலைவியாக உள்ளார். பெண்கள் சிவில் சமூக வலையமைப்பின் தலைவி, சமூக செயற்பாட்டு ஒன்றிணைந்த அணியின் உபதலைவி ஆகிய பதவிகளை வகிப்பதோடு இப்பதவிகள் ஊடாக சமூக சேவைகளை செய்து வருகிறார். கிளிநொச்சி மாவட்டத்தின் காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரை இது தொடர்பில் உரிய இடங்களுக்கு கூட்டிச் செல்ல நடவடிக்கை எடுத்தல்? கிராம மக்களுடன் இணைந்து மதுபாவனைக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல், நுண்கடனுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்தல், ஆதரவற்ற பின்தங்கிய சிறுவர்கள் கல்வியைப் பெற்றுக்கொடுதத்ல், ஊட்டச்சத்துக்குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுத்தல், பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்கள், காணி உறுதிகள் போன்ற அவசியமான சட்ட ஆவணங்களைப் பொற்றுக்கொடுத்தல்ஆகிய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதேவேளை நுண்கடன் நிதிக்கு எதிரான வளவாளராகவும் செயற்பட்டு வருகிறார். பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் கடன்கள், உதவிகள், தொழிற்பயிற்சிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். யுத்தத்தின் பின் நாட்டை எப்படி கட்டியெழுப்புவது, மக்களை அதில் இருந்த எவ்வாறு வெளிகொண்டுவருவது தொடர்பாக சிங்கப்பூரில் 2012ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் தவச்சிறி கலந்துகொண்டுள்ளார்.


விருதுகள்

2013ஆம் ஆண்டு ”2013-என் சமாதான” (N-Peace Award) விருதை இலங்கை சார்பில் தாய்லாந்து நாட்டில் இவர் பெற்றுள்ளார்.

மாதர் சங்கத்தின் ஊடாக உற்பத்தியாளர்களை (சுய முயற்சியாளர்களை) உருவாக்கியமைக்காக மாகாண மட்ட சிறந்த மாதர் சங்கத் தலைவிக்கான விருது.

மனித உரிமை ஆணைக்குழு யாழ்ப்பாணம் – சிறந்த மனித உரிமைச் செயற்பாட்டாளருக்காக கிளிநொச்சி மாவட்டம் சார்பில் இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

வெளி இணைப்புக்கள்